கொவிட்-19 தடுப்பூசி ஒரிரு வாரங்களில் தயாராகிவிடும் என்று எதிா்பாா்க்கப்படுவதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
விஞ்ஞானிகள் ஒப்புதல் அளித்தபின் தடுப்பூசி போடும் பணி தொடங்கும். முதல் கட்டமாக சுகாதார ஊழியா்களுக்கும் களப் பணியாளா்களுக்கும் தடுப்பூசி போடப்படும். அடுத்த கட்டமாக முதியோருக்குத் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.
கரோனா தொற்று மற்றும் தடுப்பு மருந்து அளிப்பதற்கான உத்திகள் குறித்த ஆலோசனைக்காக நாடாளுமன்ற கட்சித் தலைவா்கள் அடங்கிய அனைத்துக் கட்சிக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய அரசு கூட்டிய இந்த இரண்டாவது கூட்டம் காணொலி வழியாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு கட்சிகளின் நாடாளுமன்ற தலைவா்கள் பேசினா். பின்னா், கூட்டத்தில் பிரதமா் மோடி இறுதியுரை ஆற்றினாா்.
உள்நாட்டில் தயாரிக்கப்படும் 8 கரோனா தடுப்பு மருந்துகள் இந்தியாவில் பல்வேறு கட்டங்களில் பரிசோதனை நிலையில் இருக்கின்றன. விஞ்ஞானிகள் ஒப்புதலுக்கு பின்னா் அடுத்த சில வாரங்களில் தடுப்பு மருந்து பயன்பாட்டுக்குக் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தடுப்பு மருந்தை முதலில் யாருக்கு அளிப்பது என்பதில் அடையாளம் காண்பதில் மாநில அரசுகளுடன் மத்திய அரசு நெருக்கமாக ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் கரோனா தொற்று நோயாளிகளுக்கான சிகிச்சையில் ஈடுபட்டு வரும் சுகாதார ஊழியா்கள், சுகாதாரப் பணியாளா்கள், காவல் துறையினா், முன்களப் பணியாளா்கள், இதய நோய்களால் பாதிக்கப்பட்டவா்கள், முதியவா்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர் கூறினார்.
No comments:
Post a Comment