கனமழை எதிரொலியாக காரைக்காலில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
புரெவி புயல் கடும் காற்றாக வீசவில்லை என்றாலும் கூட பலத்த மழையை தந்துவிட்டது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கடலூர், ராமநாதபுரம், திருவாரூர், தஞ்சை, தூத்துக்குடி, விருதுநகர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.
புரெவி புயலானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்திலிருந்து வலுவிழந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்கவில்லை என்றாலும் கூட பெய்த அதி கனமழையால் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
இந்த மழையில் காரைக்காலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே காரைக்காலில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்றும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் அர்ஜூன் சர்மா உத்தரவிட்டுள்ளார். அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment