2 வாரங்களுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்.- சுகாதாரத்துறை செயலாளர் தகவல். - Kalvimurasutn

Latest

Wednesday, April 14, 2021

2 வாரங்களுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்.- சுகாதாரத்துறை செயலாளர் தகவல்.

 தமிழகத்தில் பெருகி வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.


தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு கடந்த 10ம் தேதி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் ஊரடங்கு விதிப்பதற்கான சூழ்நிலை இல்லை. அடுத்து வரும் 2 வாரங்களுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்.


அரசு மருத்துவமனையில் தேவையான அளவு வெண்டிலேட்டர்கள் கையிருப்பு உள்ளது. முகக்கவசம் அணியாத 2.39 லட்சம் நபர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. எனவே தொற்று பரவலை கட்டுப்படுத்த அனைவரும் முககவசம் அணிந்து கொண்டு செல்வது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment