சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும் கல்வித்துறை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருவதை தொடர்ந்து, மகாராஷ்டிர மாநிலத்தில் பொதுமுடக்கமும், பல மாநிலங்களில் இரவுநேர பொதுமுடக்கமும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்புத் தோவுகள் மே 4-ஆம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், தில்லியில் மத்திய கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று நண்பகலில் ஆலோசனை மேற்கொண்டார்.
இதன்பிறகு, மத்திய கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,கரோனா பரவலை கருத்தில் கொண்டு மே 4 முதல் ஜூன் 14ஆம் தேதி வரை நடக்கவிருந்த 10ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது.
Any candidate who is not satisfied with the marks allocated to him/her on this basis will be given an opportunity to sit in an exam as and when the conditions are conducive to hold the exams.
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) April 14, 2021
மே 4ஆம் தேதி தொடங்கவிருந்த 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது. ஜூன் 1ஆம் தேதி ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment