தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவை மீறி 9,10 ஆம் வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு வர வைத்தால் அந்த கல்வி நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் மீது நடவடிக்கை:
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் திறக்கப்படவில்லை. அதன் பின்னர் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக கொரோனா பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியது. அதன் பின்னர் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
ஆனால் பள்ளிகள் திறந்து 2 மாதங்களில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமெடுக்க தொடங்கியது. அதனால் 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்பட்டது. மேலும் 1 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை வழங்கப்பட்டு ஆன்லைன் மூலமாக மட்டுமே வகுப்புகள் நடைபெற வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு காரணமாக நேரடி வகுப்புகள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது. அந்த உத்தரவை மீறி சில தனியார் பள்ளிகள் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு வர வைத்து பாடங்கள் நடத்துவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் அரசு உத்தரவை மீறி நேரடி வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
NEET Original Question Papers And Answer Tamil Medium👇👇
No comments:
Post a Comment