அரசுப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு - Kalvimurasutn

Latest

Monday, October 26, 2020

அரசுப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு

              அரசு பள்ளி முதுநிலை ஆசிரியர்களின் கல்வித் தகுதி சான்றிதழ்களை சரிபார்க்க, பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் போலி சான்றிதழில், 21 ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும், ஆசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்க்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

முதற்கட்டமாக, அரசு பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை ஆசிரியர்களின் கல்வித் தகுதி சான்றிதழ்களை, சம்பந்தப்பட்ட துறைகள் வழியே சரிபார்க்கும் பணி துவங்கியுள்ளது. 

No comments:

Post a Comment