முதன்மைக் கல்வி அலுவலரை அவதூறாக பேசிய ஆசிரியரை பணியிட மாற்றம் செய்து முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!!! - Kalvimurasutn

Latest

Sunday, November 29, 2020

முதன்மைக் கல்வி அலுவலரை அவதூறாக பேசிய ஆசிரியரை பணியிட மாற்றம் செய்து முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!!!


 முதன்மைக் கல்வி அலுவலரை அவதூறாக பேசிய ஆசிரியரை பணியிட மாற்றம் செய்து முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!!!

 கிருஷ்ணகிரி கல்வி மாவட்டம், நெடுமருதி, அரசு உயர் நிலைப் பள்ளியில் கணித பாட பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வரும் திரு.மு.அருண் என்பார் அப்பள்ளியின் தலைமையாசிரியர் மருத்துவ விடுப்பில் இருந்த போது அன்னார் பொறுப்பு தலைமையாசிரியராக இருந்துள்ளார்

இந்நிலையில் அன்னார் 26-11-2020 அன்று பள்ளியில் அனைத்து வகை ஆசிரியர்கள் கூட்டத்தை கூட்டி கூட்டத்தில் பேசும் போது முதன்மைக் கல்வி அலுவலரை அவதுறாக பேசியதாக தெரியவந்ததையடுத்து அதுகுறித்து 27-11-2020 அப்பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களிடமும் நோடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நேரடி விசாரணையின் போது அது உண்மை என தெரியவந்தது. மேலும் பொறுப்பு தலைமையாசிரியர் திருமு அருண் என்பார் தான் பேசியது உண்மை தான் எனவும் மன்னிப்பு கோரி கடிதம் அளித்துள்ளார்

இச்செயல் தமிழ்நாடு அரசு பணியாளர் நடத்தை விதிகள் 1973 ன்படி உயர் அறுவலரை அவதுராக பேசி தன்னுடைய ஆசிரியர் பணிக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளார். அதனடிப்படையில் அன்னாருக்கு தேன்களிக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள கணித பாட பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு நிர்வாக மாறுதல் வழங்கி இதன் மூலம் ஆணை வழங்கப்படுகிறது.


சம்மந்தப்பட்ட ஆசிரியருக்கு நிர்வாக மாறுதல் அளிக்கப்பட்ட பள்ளியில் பணியில் சேரத்தக்க வகையில் பணிவிடுவிப்பு மற்றும் பணியில் சேர்ந்த அறிக்கையினை இல்வமுவலகத்திற்கு பணிந்தனுப்பிட சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


No comments:

Post a Comment