தமிழகத்தில் 3 IAS அதிகாரிகளை இடமாற்றம்! - Kalvimurasutn

Latest

Sunday, November 29, 2020

தமிழகத்தில் 3 IAS அதிகாரிகளை இடமாற்றம்!


 தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


தமிழக அரசு சமீபத்தில் இரண்டு முறை பெரிய அளவில் மாவட்ட ஆட்சியர்களை, துறைச் செயலர்களை மாற்றி உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் இன்று மீண்டும் 2 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமைச் செயலர் சண்முகம் பிறப்பித்த உத்தரவு வருமாறு:

1. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் மாற்றப்பட்டு வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை செயலராக மாற்றப்பட்டுள்ளார்.

2. வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை செயலராக பதவி வகிக்கும் ராஜேஷ் லக்கானி மாற்றப்பட்டு காப்பகங்கள் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

3. வேளாண் விற்பனை, வேளாண் வணிகத்துறை ஆணையர் ஷன்சொங்கம் ஜடாக் சிரு மாற்றப்பட்டு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு மேற்கண்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment