விழுப்புரம் அருகே சாலையில் கிடந்த ரூ.21,700 பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த எட்டாம் வகுப்பு மாணவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபன் மகன் குமரகுரு (14). இவர் அங்கு உள்ள ராமகிருஷ்ணா பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
புதன்கிழமை காலை தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட செல்வதற்காக சுங்கச்சாவடி அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் பகுதிக்கு சென்றார்.
அப்போது சாலையோரம் கீழே கிடந்த ரூபாய் நோட்டுகள் எடுத்து பார்த்தபோது அதில் 21 ஆயிரத்து 700 ரூபாய் இருந்தது தெரியவந்தது.
கிராமப்புற அரசு பள்ளி மாணவர்கள் தயாரித்த மிகச்சிறிய செயற்கைக்கோள்கள் - உலக சாதனை முயற்சி
பணத்தை தவற விட்டவர்கள் யார் என்று தெரியாததால், அதனை எடுத்துக்கொண்டு அவர் வீட்டுக்குச் சென்று, போலீசில் ஒப்படைக்குமாறு அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அவரது தாயார் ஹேமலதாவை அழைத்துக்கொண்டு விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அந்த தொகையை ஒப்படைத்தார்.
சிறுவனின் நற்குணத்தை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், அவரைப் பாராட்டி சால்வை அணிவித்து புத்தகங்கள் வழங்கி வாழ்த்தினார்.
No comments:
Post a Comment