தமிழகத்தில் ஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளிகள் திறப்பு. - Kalvimurasutn

Latest

Thursday, February 4, 2021

தமிழகத்தில் ஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளிகள் திறப்பு.



 தமிழகத்தில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

அரசுப்பணியாளர்கள், ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து- அரசாணை

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது.

அதற்கு 90% பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் ஜனவரி 19ஆம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.

தற்போது அரசு பள்ளிகளில் 92 சதவீத மாணவர்கள் வருகை புரிந்துள்ளதால் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.இவர்களுக்கு ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை தவிர பிற நாட்களில் வாரத்தில் ஆறு நாட்களுக்கு என பள்ளிகள் செயல்படும் என்று அறிவித்துள்ளது.

9 & 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளி திறக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் வெளியீடு !

இந்நிலையில் பிப்ரவரி 8-ஆம் தேதி 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒருநாள் விட்டு ஒருநாள் அல்லது ஷிப்ட் முறை என்று சுழற்சி அடிப்படையில் வகுப்புக்களை நடத்திக் கொள்ளலாம். மாணவர்கள் கட்டாயம் தனிமனித இடைவெளியை கடைபிடித்து முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

ஹீரோவான தலைமை ஆசிரியர்:பணியிடமாறுதலாகி செல்லும் தலைமை ஆசிரியரை தோளில் தூக்கி வைத்து ஆடல், பாடல்களுடன் உற்சாக நடனமாடி வழியனுப்பிய மக்கள் 

No comments:

Post a Comment