தமிழகத்தில் அனைத்து இளநிலை மற்றும் முதுநிலை வகுப்புகளுக்கும் பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் முழுமையாக கல்லூரிகள் திறக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்களுக்கு நடக்கவிருந்த தேர்வுகள் அனைத்தும் பெரும்பாலும் ரத்து செய்யப்பட்டன. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் அனைத்து இளநிலை, முதுநிலை வகுப்புகளுக்கும் பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் முழுமையாக கல்லூரிகள் திறக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் கட்டடக்கலை முதலாமாண்டு மாணவர்களுக்கு பிப்ரவரி 8 முதலும், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மார்ச் 15ஆம் தேதி முதலும், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு ஏப்ரல் ஐந்தாம் தேதி முதலும் வகுப்புகள் திறக்கப்படும். மேலும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான விடுதிகள் பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளது.
பள்ளி மாணவர்கள் ஆன்லைன் தேர்வில் 10 சதவீதம் மதிப்பெண்கள்; கல்வி அதிகாரிகள் அதிர்ச்சி
No comments:
Post a Comment