தமிழக முதலமைச்சராக மே 7 ஆம் தேதி பதவியேற்கிறார் மு க ஸ்டாலின். - Kalvimurasutn

Latest

Monday, May 3, 2021

தமிழக முதலமைச்சராக மே 7 ஆம் தேதி பதவியேற்கிறார் மு க ஸ்டாலின்.

 தமிழக முதலமைச்சராக பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில் இம்மாதம் 7 ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் எளிமையாக பதவி ஏற்புவிழா நடைபெறும் என மு.க. ஸ்டாலின் தெவித்துள்ளார். இந்நிலையில், 24 முதல் 28 அமைச்சர்கள் வரை அப்போது பதவியேற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது. அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்ட இளம் தலைமுறையினருக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் சொல்லப்படுகின்றது. இந்நிலையில் முதல்வராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், ''தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்''எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment