கொல்கத்தா அணியில் இரு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், இன்று நடக்க இருந்த கொல்கத்தா - பெங்களூரு இடையேயான போட்டி ஒத்திவைப்பு.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர்கள் பபுளில் கொரோனா வைரஸ் நுழைந்துவிட்டதால் பல வீரர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா - ஆர்சிபி அணிகள் மோதவிருந்தன.
இந்நிலையில் கொல்கத்தா அணி வீரர்கள் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த போட்டி ஒத்திவைக்கப்படவுள்ளது.
இன்றைய போட்டிகாக தயாராகி கொண்டிருந்த கொல்கத்தா அணி வீரர்கள் பலருக்கு ஒருவரின் பின் ஒருவராக திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் பயிற்சி ஆட்டங்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு வீரர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. அந்த பரிசோதனைகளின் முடிவில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸுக்கு முதலில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார். ஆனால் அடுத்தடுத்து வந்த பரிசோதனைகளின் முடிவில் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் ஆகியோருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்னும் மற்ற வீரர்களின் நிலை என்பது தெரியவில்லை. எனினும் மொத்த அணியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் பெங்களூரு அணிக்கு எதிராக இன்று நடைபெறவிருந்த போட்டி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை பிசிசிஐ வட்டாரங்கள் உறுதி செய்துள்ளது.
No comments:
Post a Comment