தமிழக அரசின் ஆலோசகர் பதவியைச் சண்முகம் ராஜினாமா செய்துள்ளார்.
நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 138 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 70 இடங்களைக் கைப்பற்றியது. வருகின்ற மே 7 ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்கிறார். தமிழக சட்டமன்றத்தேர்தலில் தோல்வியைச் சந்தித்ததைத்தொடர்ந்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி தனது முதல்வரைப் பதவியை ராஜினாமா செய்தார். இவரைத்தொடர்ந்து தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரான விஜய் நாராயணனின் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் தமிழக அரசின் ஆலோசகர் பதவியைச் சண்முகம் ராஜினாமா செய்துள்ளார்.
இவர் தனது ராஜினாமா கடிதத்தைத் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சனிடம் வழங்கினார்.
No comments:
Post a Comment