ஆன்லைன் படிப்புக்கு புதிய மொபைல் வாங்க டீ விற்பனை செய்யும் 8-ம் வகுப்பு மாணவன் - Kalvimurasutn

Latest

Sunday, November 29, 2020

ஆன்லைன் படிப்புக்கு புதிய மொபைல் வாங்க டீ விற்பனை செய்யும் 8-ம் வகுப்பு மாணவன்



ஆன்லைன் படிப்புக்கு புதிய மொபைல் வாங்க டீ விற்பனை செய்து பணம் சேர்க்கும் 8ஆம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகன் ராகுல். இவன் திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறான். இந்நிலையில், கொரோனா பொதுமுடக்கத்தால் தந்தைக்கு வேலை இல்லாமல் இருந்ததால் எல்லா நடுத்தர குடும்பமும் சந்தித்த பொருளாதார சிரமத்தை சிறுவனின் குடும்பத்தினரும் சந்திக்க நேரிட்டதாம்.

இதனை தொடர்ந்து படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையிலும், தந்தைக்கு சரிவர வேலை வாய்ப்பு இல்லாததால் அன்றாட அத்தியாவசிய செலவுகளுக்கே திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்பில் பாடங்கள் நடத்தப்படுகிறது. அதில் கலந்துகொள்ள போன் வாங்க தந்தையிடம் பணம் இல்லாததை உணர்ந்த சிறவன், தனது முயற்சியில் பணம் ஈட்டி தனக்கும் தனது அக்காவிற்கும் மொபைல் வாங்க முடிவெடுத்தான்.

சிறுவனின் தாய் மற்றும் அக்காவின் உதவியோடு வீட்டில் டீ தயார் செய்து அருகாமையில் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு சைக்கிள் மூலம் விற்பனை செய்து வருகிறார். பொதுமக்கள் ஆர்வமுடன் சிறுவனிடம் டீ வாங்கி குடிக்கின்றனர். இதன் மூலம் கிடைக்கக்கூடிய வருமானத்தில் சிறிது சிறிதாக சேர்த்து வைத்து தானும் தனது அக்காவும் ஆன்லைன் படிப்பில் கலந்துகொள்ள புதிய மொபைல் போன் வாங்க முயற்சி செய்ததாக மாணவன் ராகுல் கூறினான்.

இதுமட்டுமன்றி சிறுவன் டீ விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தால் தற்போது தங்களுடைய குடும்ப செலவினை ஓரளவிற்கு ஈடுகட்ட முடிவதாக சிறுவனின் தாயார் சுமதி உருக்கமாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment