புயல் பாதிப்பு சரியாகும் வரை ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
அதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமை சீராகும் வரை ஆன்லைன் வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால் மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment