தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வில் மாணவர்கள் வெறும் 10 சதவீத மதிப்பெண்கள் மட்டுமே எடுத்துள்ளனர். இதனால் கல்வி அதிகாரிகளை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.எனவே கல்வி அதிகாரிகள் கற்பித்தலை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா நோயின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. இதனை தொடர்ந்து மாணவர்கள் கல்வி பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலமாகவும் தொலைக்காட்சி வாயிலாகவும் கல்வி கற்பிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப் படாமல் ஆன்லைன் வகுப்பு மற்றும் கல்வி டிவி வழி பாடங்கள் கற்பிக்கப்பட்டன .மாணவர்கள் எந்த அளவுக்கு பாடத்தை புரிந்து உள்ளனர் என்பதை அறிய ஆன்-லைன் வழி தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் மாணவர்களின் விடைகளை ஆய்வு செய்ததில் பெரும்பாலும் மாணவர்கள் 10 சதவீதத்துக்கும் குறைவாகவே மதிப்பெண்கள் பெற்று உள்ளதாக மாவட்ட கல்வி அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் காலை முதல் மாலை வரை நேரத்தை வீணடிக்காமல் பாடங்களை நடத்த வேண்டுமெனவும் சிறு தேர்வுகளை தினமும் நடத்தியும் மாணவர்கள் பொது தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும் எனவும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment