பள்ளிக் கல்வி - அரசு / நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 08.12.2020 நிலவரப்படி நிரப்பத் தகுந்த பட்டதாரி ஆசிரியர்கள் (அனைத்துப் பாடம்) காலிப் பணியிட விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் ( பணியாளர் தொகுதி)உத்தரவு!!
பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி / மாதிரிப் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 08.12.2020 அன்றைய நிலவரப்படி நிரப்பத்தகுந்த பட்டதாரி / இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 11.12.2020 அன்று மாலைக்குள் சி3 பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கும் c3sec.tndse@nic.in முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பமிட்ட நகலொன்றினையும் அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment