அரிசியில் பல வகைகள் உள்ளன அதில் ஒவ்வொன்றும் உடலுக்கு பல நன்மைகளை தருபவையாக இருக்கிறது.
அதில் ஒவ்வொன்றும் உடலுக்கு பல நன்மைகளை தருபவையாக இருக்கிறது. அதில் சிவப்பு அரிசியில் எண்ணில் அடங்கதா மருத்துவகுணங்கள் உள்ளது.
இந்த சிவப்பு அரிசியில் அதிகளவு மாங்கனீசியம், கார்போஹைட், செலினியம், துத்தநாகம், கலோரிகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, கொழுப்புச்சத்து, மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
அந்தவகையில் தற்போது இதை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.
சிவப்பு அரிசி சாப்பிடுபவர்களுக்கு டைப் 2 நீரிழிவு அபாயத்தை குறைக்க செய்கிறது.
இதிலிருக்கும் குறைந்த கிளைசெமின் குறியீடு சர்க்கரை அளவை கட்டுப்படுத்த செய்வதால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை செய்யகூடியது.
சிவப்பு அரிசி எடை இழப்பை ஊக்குவிக்கும் என்று சொல்லப்படுகிறது. இதில் உள்ள கொழுப்பு பூஜ்ஜியம் அளவு என்பதால் இதன் நுகர்வு உடலில் எடையை அதிகரிக்க செய்யாது. மேலும் உடலில் சேரும் உயர் கொழுப்புகளை கட்டுப்படுத்த அதிலிருந்து விடுபட சிவப்பு அரிசியை பயன்படுத்துவது நல்லது.
சிவப்பு அரிசியில் மட்டும் தான் வைட்டமின் இ உள்ளது. இது உடலில் இருக்கும் எல் டிஎல் என்னும் கெட்ட கொழுப்பை குறைக்க செய்கிறது. மேலும் இது இதய ஆரோக்கியத்துக்கும் நன்மை செய்யகூடியதாக இருக்கிறது. இதில் உள்ள மொனோக்கோலின் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது.
சிவப்பு அரிசி செரிமானத்தன்மையை மேம்படுத்தகூடியது இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி குடல் இயக்கங்களை எளிதாக்குகிறது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் இல்லை.
பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை பிரச்சனைக்கு தீர்வளிக்க கூடும். எலும்புகள் மற்றும் பற்களை பராமரிக்கவும் செய்கிறது.இது கீல்வாதம் மற்றும் ஆஸ்டியோபொராசிஸ் பிரச்சனைகளை தடுக்க செய்கிறது.
சிவப்பு அரிசி நுரையீரலை பாதுகாக்கும் சத்துகளை உள்ளடக்கியுள்ளது. இதில் இருக்கும் மெக்னீசியம் ஆஸ்துமாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தக்கூடும். இதிலிருக்கும் செலினியம் தொற்றுநோய்கள் உடலில் அண்டாமல் பாதுகாக்க செய்கிறது.
சிவப்பு அரிசி இருக்கும் வைட்டமின் இ உடலில் ஆற்றல் கொண்ட ஆன் டி ஆக்ஸிடண்ட் உடன் இணைந்து செயல்படும் போது அது இதய நோய்கள் வராமல் இதயத்துக்கு பாதுகாப்பு அளிக்கிறது.
சிவப்பு அரிசியில் உள்ள ஆன் டி ஆக்ஸிடண்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்கலை எதிர்த்து போராட செய்கிறது. இதனால் சருமம் வயதான தோற்றத்தை தள்ளிப்போக்க செய்கிறது. மேலும் சரும சுருக்கம் மற்றும் புற ஊதா கதிர்களின் தாக்கத்தால் உண்டாகும் பாதிப்பை குறைக்கும்.
சிவப்பு அரிசியில் சத்துக்கள் அனைத்தும் மாவுச்சத்தில் சென்று சேர்க்கப்படுவதால் இதை தீட்டிய பிறகும் நாம் சத்தை பெற்றுவிட முடியும்.
No comments:
Post a Comment