8 ஆம் தேதி முதல் கல்லூரி நிறுவனங்கள் திறப்பதற்கான அரசாணை வெளியீடு. வாரத்தில் 6 நாட்கள் கல்லூரிகள் இயங்கும் ! - Kalvimurasutn

Latest

Friday, February 5, 2021

8 ஆம் தேதி முதல் கல்லூரி நிறுவனங்கள் திறப்பதற்கான அரசாணை வெளியீடு. வாரத்தில் 6 நாட்கள் கல்லூரிகள் இயங்கும் !

 


 வரும் 8 ஆம் தேதி முதல் கல்லூரி நிறுவனங்கள் திறப்பதற்கான அரசாணை வெளியீடு. 

கலை, அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் டிப்ளமோ கல்லூரிகளில் படிக்கும் அனைத்து ஆண்டு மாணவர்களுக்கும் பிப்ரவரி 8-ம் தேதி முதல், வாரத்தில் 6 நாட்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

கரோனா ஊரடங்கு காரணமாகக் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கல்லூரிகள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டன. மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படாமல் இருக்க ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. அதேபோல இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையிலேயே தேர்வுகளும் நடத்தப்பட்டன.

எனினும் முதலாமாண்டுக்கான 2-வது செமஸ்டர், இரண்டாமாண்டு மாணவர்களுக்கான 4-வது செமஸ்டர் மற்றும் முதுகலை மாணவர்களுக்கான 2-வது செமஸ்டர் தேர்வுகளும், அரியர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.

தொற்றுப் பரவல் குறைந்தபிறகு இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கடந்த டிசம்பர் மாதம் 7-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. இந்நிலையில், கலை, அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் டிப்ளமோ கல்லூரிகளில் படிக்கும் அனைத்து ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு பிப்ரவரி 8-ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

பாடத்திட்டத்தை உரிய காலத்தில் முடித்துத் தேர்வுகளை நடத்த, வாரத்தில் 6 நாட்களுக்கு வகுப்புகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனா முன்னெச்சரிக்கை குறித்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அரசாணையை உயர் கல்வித்துறைச் செயலர் அபூர்வா வெளியிட்டுள்ளார்.





No comments:

Post a Comment