PG Teacher - 2% Promotion Selected Candidates List And Counseling Date Published. - Kalvimurasutn

Latest

Friday, February 5, 2021

PG Teacher - 2% Promotion Selected Candidates List And Counseling Date Published.

 முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு - அமைச்சுப் பணியிலிருந்து 2% ஒதுக்கீடு அடிப்படையில் பணிமாறுதல்/பதவி உயர்வு  மூலம் முதுகலை ஆசிரியராக நியமனம் செய்ய 06.02.2021 அன்று பணிநியமன கலந்தாய்வு.


அமைச்சுப்பணியிலிருந்து 2 % ஒதுக்கீடு அடிப்படையில் பணிமாறுதல் / பதவி உயர்வு மூலம் முதுகலை ஆசிரியராக நியமனம் செய்ய பணியாளர்களின் பெயர்ப்பட்டியல் பார்வையில்காண் இவ்வலுவலக செயல்முறைகளின்படி வெளியிடப்பட்டது. அப்பட்டியலில் வரிசை எண் 1 முதல் 150 உள்ள பணியாளர்களுக்கு கீழே அட்டவணையில் குறிப்பிட்டுரெளபடி அமைச்சுப்பணியிலிருந்து பணிமாறுதல் / பதவி உயர்வு மூலம் முதுகலை ஆசிரியராகப் நியமனம் வழங்குவதற்கான பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இக்கலந்தாய்வில் வரிசை எண் .1 முதல் 150 உள்ள தங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த பணியாளர்களுக்கு கலந்தாய்வில் 1 மணிநேரம் முன்னதாக கலந்தாய்வு நடைபெறும் இடத்தில் தவறாமல் கலந்து கொள்ளும் வகையில் தகவல் தெரிவித்திட அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 


மேற்காண் கலந்தாய்வில் வரிசை எண் .1 முதல் 150 உள்ள பணியாளர்கள் கண்டிப்பாக கலந்து கொள்ளவும் அவ்வாறு கலந்து கொள்ளாத பணியாளர்களுக்கு எஞ்சியுள்ள காலிப்பணியிடங்களில் பள்ளிக்கல்வி இணை இயக்குநர் ( மேநிக ) அவர்களால் பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும் எனவும் , தனியர் முதுகலை ஆசிரியர் பதவியில் பணியில் சேர விருப்பம் இல்லை எனில் தற்காலிக நிரந்த உரிமைவிடல் உடனடியாக சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரிடம் அளிக்கவேண்டும். கலந்தாய்வில் பங்கேற்காத பணியாளர்கள் எக்காரணம் கொண்டும் பணி ஒதுக்கீட்டில் உரிமை கோர இயலாது.


பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் 

No comments:

Post a Comment